பாலு மகேந்திராவின் எழுத்து, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் 1982ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மூன்றாம் பிறை'.
இத் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத் திரைப்படம் வெளியாகி மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படத்தின் 'கண்ணே கலைமானே', 'பொன்மேனி உருகுதே', 'பூங்காற்று புதிதானது' போன்ற பாடல்கள் இன்றளவும் இரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 44 ஆண்டுகளுக்கு பிறகு இத் திரைப்படம் மீண்டும் Realsed செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்று OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.