சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2025ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 600 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி, வேலை, வணிகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இணையமானது இன்றைய உலகில் மிகப்பெரிய பங்கு வகிப்பதோடு, உலகிலுள்ள 195 நாடுகளில் குறைந்தபட்ச அளவிலாவது இணைய சேவை பயன்பாட்டில் உள்ளது.
அதனடிப்படையில், உலகில் அதிவேக இணைய சேவை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகள் பின்வருமாறு...
01. சிங்கப்பூர் - 410.06Mbps
02. ஐக்கிய அரபு அமீரகம் - 382.32Mbps
03. பிரான்ஸ் - 349.25Mbps
04. சிலி - 348.41Mbps
05. ஹொங்கொங் - 343.36Mbps
குறித்த பட்டியலில், இலங்கை 32.61Mbps வேகம் கொண்டு 130ஆவது இடத்தில் உள்ளது.