54 Views
கடலை மாவு, தயிர் கலந்த பேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவது மற்றும் கற்றாளைத் தடவுவது இயற்கையாகவே அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்த உதவும்.
தினமும் இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவ வேண்டாம் இது சருமத்தை மேலும் உலர வைத்து அதிக எண்ணெயைச் சுரக்கச் செய்யும்.
கடலை மாவு, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையைப் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவவும். சுத்தமான ஐஸ் கட்டியால் முகத்தை மென்மையாகத் தடவினால் சருமத் துளைகள் இறுக்கமடையும்.
தண்ணீர் அதிகம் குடித்து உடல் மற்றும் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிகமான எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பது, அதிகப்படியான எண்ணைத் தன்மையைக் குறைக்க உதவும்.