33 Views
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், எதிர்காலத்தில் smart phones , மடிக்கணனிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என்ற தகவல் தொழில்நுட்ப வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
புதிய AI அம்சங்களை வழங்க அதிக திறன் கொண்ட சிப்கள், அதிக RAM மற்றும் மேம்பட்ட வன்பொருட்கள் தேவைப்படுவதால் உற்பத்திச் செலவும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இணைய இணைப்பு இல்லாமலேயே இயங்கும் On-device AI வசதிகள் தற்போது புதிய சாதனங்களில் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.
புகைப்படத் திருத்தம், நேரடி மொழிபெயர்ப்பு, ஆவணச் சுருக்கம், குரல் உதவியாளர் போன்ற அம்சங்களுக்காக சக்திவாய்ந்த வன்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அதன் செலவு இறுதியில் நுகர்வோரின் வாங்கும் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.