62 Views
தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்தும் இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிவது கஷ்டமாக இருக்கும் இந்த காலத்தில், கூகுள் நிறுவனம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கும் ஒரு சிறப்பான அம்சத்தை உருவாக்கியுள்ளது.
இன்றைய ஸ்மார்ட்போன்களில் திரையை திருப்ப உதவும் 'அக்சிலரோமீட்டர்' என்ற உணரிகள் உள்ளன. இவை நில அதிர்வுகளையும் துல்லியமாக கண்டறியும் தன்மை கொண்டவை.
உலகெங்கிலும் உள்ள சுமார் 2 பில்லியன் Android கைபேசிகளை ஒரு வலையமைப்பாக கூகுள் பயன்படுத்துகிறது.
சாதாரண அதிர்வுகளையும் நிலநடுக்க அதிர்வுகளையும் கூகுளின் சிஸ்டம் வேறுபடுத்திப் பார்க்கும். ஒரே இடத்தில் இருக்கும் பல மில்லியன் கைபேசிகளில் இருந்து ஒரே நேரத்தில் அதிர்வுகள் பதிவாகும்போது, அது நிலநடுக்கம் தான் என்பதை கூகுள் உறுதிப்படுத்துகிறது.
நிலநடுக்கம் உறுதி செய்யப்பட்ட உடனேயே, ஆபத்து உள்ள பகுதியில் இருக்கும் மக்களுக்கு இரண்டு விதமான எச்சரிக்கைகள் கைபேசிக்கு அனுப்பப்படும்.
கைபேசியில் இருக்கும் சாதாரண தொழில்நுட்பத்தை வைத்தே, பேரழிவில் இருந்து மக்களைக் காப்பாற்ற கூகுள் உருவாக்கியுள்ள மிகப்பயனுள்ள அம்சம் இதுவாகும்.