நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில், வெறும் 19 வயது மாத்திரம் நிரம்பிய சுழல்பந்துவீச்சாளர் விட்டல் லோவ்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ICC இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய லோவ்ஸ், குறித்த தொடரில் அதிக ஓட்டமற்ற பந்துகளை வீசிய பந்துவீச்சாளராகவும் மாறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.