தனது தனித்துவமான நடனத்தினாலும் புரட்சிகரமான பாடல்களினாலும் உலகப்புகழ் பெற்றவர்தான் Michael Jackson.
'King of Pop' என்று இரசிகர்களால் அழைக்கப்படும் Michael Jacksonஇன் வாழ்க்கையானது 'Michael' என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி கடந்த 10ஆம் திகதியன்று வெளியாகியிருந்தது.
உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் ரூ.1,450 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தி வரும் 'Michael' திரைப்படமானது இந்தியாவிலும் வசூலைக் குவித்து வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் மட்டும் 'Michael' திரைப்படமானது இந்திய மதிப்பில் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது.