பிரபல செயலியான WhatsApp, எதிர்வரும் செப்டம்பர் 8, 2026 முதல் சில பழைய Android போன்களில் இயங்காது என்று அறிவித்துள்ளது.
தற்போது Android 5.0 மற்றும் அதற்குமேல் இயங்கும் சாதனங்களில் மட்டுமே WhatsApp ஐ பயன்படுத்த முடியும்.
ஆனால், புதிய அம்சங்களுக்கு அதிகப்படியான சிஸ்டம் திறன்கள் தேவைப்படுவதால், WhatsApp தனது குறைந்தபட்ச தேவையை Android 6.0-ஆக உயர்த்தியுள்ளது.
இதனால், Android 5.0 மற்றும் 5.1 இயங்கும் போன்களில் WhatsApp பயன்பாடு நிறுத்தப்படும். இதனால் Google Drive அல்லது தொலைபேசியில் Chat Backup எடுத்து வைக்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய போனுக்கு மாறிய பிறகு, அந்த backup மூலம் உரையாடல்களை மீண்டும் பெறலாம்.
இந்த மாற்றம் WhatsApp Messenger மற்றும் WhatsApp Business இரண்டுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.