நடிகை சமந்தாவின்‘எங்கள் தங்கம்’ திரைப்படம் முதல் வாரத்தில் இந்திய மதிப்பில் ரூபா 73 கோடி ரூபா வசூல் செய்து சாதனை படைத்துள்ள
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, Myositis நோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பாளராகவும் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில், சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘Maa Inti Bangaaram’ கடந்த 19 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியானது. மேலும் இதுவரை இல்லாத வகையில் அதிரடி கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.
குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது நடிப்பு இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் படம், சமந்தாவின் வெற்றிகரமான மீள் வருகை படமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் முதல் வாரத்தில் இந்திய மதிப்பில் ரூபா.73 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் முதல் நாளிலேயே சுமார் இந்திய மதிப்பில் ரூபா 13 கோடி வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.