இயற்பியல் துறையில பல தசாப்தங்களாக, காணப்பட்ட ஒரு பாரம்பரியக் கருத்தை உடைத்தெறிந்திருக்கின்றார்கள் பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள்.
பொதுவாக, உலோகங்களின் ஒளியியல் பண்புகளை குறிப்பாக ஒளியோடு உலோகங்கள் தொடர்பு கொள்ளும் தன்மையை மாற்ற முடியாது என்றுதான் இதுவரைக்கும் நம்பப்பட்டு வந்தது. ஆனால், 'Mechanical pressure' எனப்படும் இயந்திரவியல் அழுத்தத்தைப் பிரயோகிப்பதன் மூலமாக, உலோகங்களின் ஒளியியல் பண்புகளைத் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இந்த பெங்களூரு ஆராய்ச்சியாளர்கள் உலகத்திலேயே முதல் தடவையாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள்.
இதன் மூலமாக, 'Semiconductor' தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய மிகத் துல்லியமான ஒளியியல் சாதனங்களை—
அதாவது 'Optical devices' களை இனிமேல் மிக இலகுவாகவும் புதிய வழிகளிலும் உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் தொழில்நுட்ப உலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்போகும் ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகவே இது பார்க்கப்படுகின்றது.