இரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன்
எதிர்பார்த்த ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4:15 மணிக்கு, பிரம்ம முகூர்த்தத்தில் அதிரடியாக வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது!
ஜூலை 24 அன்று வெளியாக வேண்டிய இந்த டிரெய்லர் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகி இரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ரமேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்த இதிகாசக் காவியத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யஷ் மற்றும் அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசைப் புயல் ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி அமைத்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
பிரமிப்பூட்டும் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மரின் மிரட்டலான பின்னணி இசை ஆகியவை படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி விருந்தாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது!