38 Views
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15 முதல் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். ரிஷப் பண்ட் தற்போது ராஞ்சியில் முன்னாள் இந்திய அணி தலைவர் மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த பயிற்சியில் துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு திறன்களை மேலும் மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுப்பயணத்தில் வெற்றிகரமான தொடக்கத்தைப் பெறும் நோக்கில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.