54 Views
இத்தொடரின் போது மகளிர் ‘ஹண்ட்ரட்’ தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணியின் வழக்கமான அணித்தலைவி பாத்திமா சனாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளதால், அவருக்குப் பதிலாக முனீபா அலி அணியை வழிநடத்தவுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 23 முதல் 28 வரையிலும், அதனைத் தொடர்ந்தான T20 தொடர் ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 4 வரையிலும் நடைபெறவுள்ளன. இந்த 6 போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.