Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: உலக சம்பியன் குகேஷ் தோல்வி

SOORIYAN GOSSIP - சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: உலக சம்பியன் குகேஷ் தோல்விSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
சென்னையில் நடைபெற்று வரும் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், இந்தியாவின் முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைஷ், உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார்.

8 முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டி 7 சுற்றுகள் கொண்டதாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5வது சுற்று ஆட்டத்தில், கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன் எரிகைஷ், 63வது காய் நகர்த்தலில் சென்னையைச் சேர்ந்த உலக சம்பியன் குகேஷை தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோரோவ், இந்திய வீரர் நிஹால் சரினை 38வது காய் நகர்த்தலில் வென்றார். இந்திய வீரர் பிரனேஷ் - அமெரிக்காவின் ஹான்ஸ் நிமன் மற்றும் பிரான்ஸ் வீரர் அலிரெஜா - ரஷ்யாவின் டிமிட்ரி இடையிலான ஆட்டங்கள் சமநிலையில் முடிவடைந்தன.

5 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், அர்ஜூன் எரிகைஷ் மற்றும் அலிரெஜா தலா 3½ புள்ளிகளுடன் கூட்டாக முதலிடத்தில் உள்ளனர். போட்டியின் 6வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன. அர்ஜூன் தனது முன்னிலையை தக்கவைத்துக் கொள்வாரா? உலக சாம்பியன் குகேஷ் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா? என்ற எதிர்பார்ப்பில் செஸ் இரசிகர்கள் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top