43 Views
அந்த வகையில், தற்போது தனது அடுத்த புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘தகப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கிடா’ திரைப்படத்தை இயக்கிய ரா.வெங்கட் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து ரஜிஷா விஜயன், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள மேலூர் கருப்பசாமி கோவிலில் எளிமையான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. படக்குழுவினர் பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.