61 Views
சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்திருக்க விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்கள் மட்டும் போதாது. தினமும் 7 முதல் 9 மணி நேரம் தரமான தூக்கம் கிடைத்தால், சரும செல்கள் வேகமாகப் புதுப்பிக்கப்பட்டு கொலாஜன் உற்பத்தி அதிகரிப்பதால் முகம் இளமையாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.
தூக்கமின்மை காரணமாக கண்களைச் சுற்றிய கருவளையம், முகப்பரு, சரும வறட்சி மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கலாம். அதேவேளையில், நல்ல தூக்கம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதால் இயற்கையான பொலிவு கிடைக்கும்.
இரவு தூங்குவதற்கு முன் தொலைபேசி ,மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களைத் தவிர்ப்பது, சுத்தமான தலையணை உறைகளைப் பயன்படுத்துவது மற்றும் தினமும் ஒரே நேரத்தில் உறங்கும் பழக்கத்தைப் பின்பற்றுவது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழிமுறைகளாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றன