கடுகு எண்ணெயை குறைந்தளவு சூடாக்கி தலையில் மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி நன்றாக வளரும். தேங்காய் எண்ணெயுடன் கடுகு எண்ணெய் கலந்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை குறையும்.
முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மற்றும் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையைப் போக்க முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். முகப் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் வராமல் தடுக்க முகச் சுத்திகரிப்பானாகப் (Cleanser) பயன்படுகிறது.
வறண்ட கால்களில் கடுகு எண்ணெயைத் தடவி வந்தால் வெடிப்புகள் மறைந்து பாதம் மென்மையாக மாறும்.