தேன் எவ்வளவு இனிப்பாக இருக்கின்றதோ அதே அளவு உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்குகின்றது. ஒரு நாளிற்கு ஒரு முறையாவது நாம் தேனை உட்கொள்வது எமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
தினமும் இரவில் நாம் தேன் சாப்பிடுவதால் இதயம் வலிமை பெறுகிறது. அதேவேளை மாதுளம் பழத்துடன் தேன் கலந்து சாப்பிடும் போது உடலில் இரத்தம் ஊறுகிறது.
குறிப்பாக குடற்புண் இருப்பவர்கள் தேனுடன் தேங்காய்ப் பாலைக் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் குடற்புண் ஆகியவை குணமடைகின்றது. உங்களுக்கு இருமல் அதிகமாக காணப்படும் நேரங்களில் எலுமிச்சை பழச்சாறுடன் தேனைக் கலந்து பருகும் போது இருமல் குணமடைகின்றது.