தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தியின் 30வது திரைப்படத்தில் இசை அமைப்பாளராக 'தேவி ஸ்ரீ பிரசாத்' இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'கார்த்தி 30' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கார்த்தி-தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வெளியான திரைப்படங்களின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியளித்த நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் Album மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளது.
மேலும் இத் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நடிகை மீனாட்சி செளத்திரி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் 1st Look poster விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.