உங்கள் தொலைபேசி Hack செய்யப்பட்டுள்ளதை அறிய சில முக்கிய அறிகுறிகளை கவனிக்க வேண்டும்.
நீங்கள் பயன்படுத்தாத போதும் தொலைபேசி அளவுக்கு அதிகமாகச் சூடாவது, வழக்கத்தை விட மிக வேகமாக Battery charge தீர்வது மற்றும் Mobile Data திடீரென அதிகளவில் செலவாவது முதன்மையான அறிகுறிகளாகும்.
மேலும், நீங்கள் பதிவிறக்கம் செய்யாத புதிய Apps திரையில் தோன்றுவது, திரையில் இடைவிடாமல் தோன்றும் சந்தேகத்திற்குரிய Pop up விளம்பரங்கள், மற்றும் உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்களுக்கு SMS அல்லது Calls செல்வது போன்றவை தொலைபேசி உளவு பார்க்கப்படுவதை உறுதிப்படுத்தும்.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக உங்களுக்குத் தெரியாத Apps-களை Uninstall செய்துவிட்டு, உங்கள் Google, சமூக வலைத்தளங்கள் மற்றும் வங்கி கணக்குகளின் Passwordsகளை மாற்ற வேண்டும்.
அத்துடன், நம்பகமான Antivirus App மூலம் தொலைபேசியை முழுமையாக Scan செய்வதும், பிரச்சனை தொடர்ந்தால் முக்கியமான தகவல்களை Backup எடுத்துவிட்டு போனை Factory Reset செய்வதும் பாதுகாப்பானது.