Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
அன்றாட வாழ்க்கையில் AI – நாம் அறியாமலேயே பயன்படுத்தும் 10 வழிகள்!

SOORIYAN GOSSIP - அன்றாட வாழ்க்கையில் AI – நாம் அறியாமலேயே பயன்படுத்தும் 10 வழிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது எதிர்கால தொழில்நுட்பம் என்ற நிலையைத் தாண்டி, தற்போது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. பணப்பரிவர்த்தனை முதல் கல்வி வரை பல்வேறு துறைகளில் AI பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மோசடிகளை கண்டறிதல் மற்றும் பரிவர்த்தனைகளை கண்காணித்தல் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக நடத்த AI உதவுகிறது. நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிதல், மருத்துவப் படங்களை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளில் AI மருத்துவ துறையில் பயன்படுத்தப்படுகிறது.

இணையத்தில் நாம் தேடும் தகவல்களைப் புரிந்துகொண்டு, தொடர்புடைய முடிவுகளை வழங்க AI உதவுகிறது.

Facebook, Instagram, YouTube போன்ற சமூக வலைதளங்களில் நமது விருப்பத்திற்கு ஏற்ப பதிவுகள் மற்றும் வீடியோக்களை AI பரிந்துரைக்கிறது. Siri, Google Assistant போன்ற குரல் உதவியாளர்கள் நமது குரல் கட்டளைகளைப் புரிந்துகொண்டு பல்வேறு பணிகளைச் செய்கின்றன.

அத்துடன் மொழிபெயர்ப்பில் அதாவது ஒரு மொழியில் உள்ள தகவலை மற்றொரு மொழிக்கு விரைவாக மாற்ற AI தொழில்நுட்பம் உதவுகிறது.

முகத்தை அடையாளம் காண்பது, புகைப்படங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல கேமரா அம்சங்களின் பின்னணியிலும் AI செயல்படுவதோடு Google Maps போன்ற செயலிகள் போக்குவரத்து நெரிசல், பயண நேரம் மற்றும் மாற்று வழிகளை கணிக்க AI பயன்படுகிறது.

இணையத்தில் நாம் முன்பு பார்த்த அல்லது வாங்கிய பொருட்களின் அடிப்படையில், புதிய பொருட்களை பரிந்துரைப்பதிலும் AI முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுரைகளை சுருக்குதல், தகவல்களை எளிமையாக விளக்குதல், எழுதுதல் மற்றும் திட்டமிடுதல் போன்ற பணிகளிலும் AI பெரிதும் உதவுகிறது.

இவ்வாறு, நாம் தனியாக கவனிக்காவிட்டாலும், தினசரி வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளுக்குப் பின்னால் AI தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top