Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
மழைக்காக முதலைக்கு நடந்த விநோத பூஜை:

SOORIYAN GOSSIP - மழைக்காக முதலைக்கு நடந்த விநோத பூஜை:Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views
தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள பீச்சுப்பள்ளி புஷ்கர காட் பகுதியில் கிருஷ்ணா ஆறு பாய்ந்தோடுகிறது. இப்பகுதியில் போதிய பருவமழை பெய்யாமல் கடுமையான வறட்சி நிலவி வந்த சூழலில், நதிக்கரையில் திடீரென ஒரு பெரிய முதலை கரை ஒதுங்கி அமைதியாகப் படுத்திருந்தது.


பொதுவாக முதலையைக் கண்டாலே அலறியடித்து ஓடும் மனிதர்களுக்கு மத்தியில், அங்குள்ள பூசகர் ஒரு விநோதமான முடிவை எடுத்தார். மழை வேண்டி அந்த முதலைக்கு சிறப்பு பூஜை செய்யத் துணிந்த அவர், அச்சமின்றி அதன் மிக அருகில் சென்றார். ஆபத்தான அந்த ஊர்வன விலங்கின் நெற்றியில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, மலர்களைத் தூவி, தேங்காய் உடைத்துத் தீபாராதனை காட்டி மழை பொழிய வேண்டும் என மனமுருக வேண்டிக்கொண்டார். 

பூசாரி தன் உடலைத் தொட்டு வழிபாடு செய்தபோதும், அந்த முதலை எவ்வித ஆக்ரோஷமும் காட்டாமல் ஒரு சாதுவான விலங்கைப் போல அமைதியாகக் கிடந்தது அங்கிருந்த பக்தர்களையும் பொதுமக்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த விசித்திர வழிபாட்டைக் காண நதிக்கரையில் கூட்டம் கூடத் தொடங்கிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் விலங்குகளின் அருகே செல்வதைத் தடுத்தனர்.

பின்னர் அந்த முதலையை எவ்வித பாதிப்புமின்றிப் பத்திரமாக மீட்டு, கிருஷ்ணா ஆற்றின் ஆழமான பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். மழைக்காக முதலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூசாரி பூஜை செய்த இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பேசுபொருளாக மாறியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top