இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய குழாத்தில் இணைக்கப்பட்ட சாய் சுதர்ஷன் சனிக்கிழமைக்குள் (08) தனது அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடதுகை துடுப்பாட்டவீரரான சாய் சுதர்ஷன் பெங்களூருவில் காணப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) உடற்தகுதி நிலையத்தில் தனது கால் உபாதைக்கான சிகிச்சைகளைப் பெற்று உடல்நிலை தேறி வருகின்றார்.
தற்போது அவர் மீண்டும் துடுப்பாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவக் குழுவின் அனுமதி கிடைத்தவுடன் ஒகஸ்ட் 8ஆம் திகதி சனிக்கிழமைக்குள் கொழும்பில் உள்ள இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.