சர்வதேச கிரிக்கெட் பேரவையின், 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் வீரர் சொனால் தினூஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சொனால் தினூஷ, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக திகழ்ந்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) சிறந்த வீரராக விருதைப் பெற்ற பின்னர் கருத்து தெரிவித்த சொனால் தினூஷ, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், ICCக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.