Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
மெட்டாவிற்கு $567 மில்லியன் அபராதம்

SOORIYAN GOSSIP - மெட்டாவிற்கு $567 மில்லியன் அபராதம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு $567 மில்லியன் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

சமூக ஊடகப் பயன்பாட்டினால் சிறுவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் மற்றும் ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி நியூ மெக்சிகோ மாநில அட்டர்னி ஜெனரல் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


நீதிபதி பிரையன் பீட்ஷீட் தனது தீர்ப்பில், “சிறுவர்களின் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைத்துள்ளது” என கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே முதற்கட்ட விசாரணையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறலுக்காக $375 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டத் தீர்ப்பில் கூடுதலாக $567 மில்லியன் சேர்க்கப்பட்டு, மெட்டா செலுத்த வேண்டிய மொத்தத் தொகை $942 மில்லியனாக உயர்ந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, இந்த $567 மில்லியன் தொகையில் $420 மில்லியன் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நேரடி மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளுக்காகவும், மீதமுள்ள $147 மில்லியன் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் அடுத்த 5 ஆண்டுகளில் செலவிடப்படும்.

அபராதத் தொகையோடு சேர்த்து, சிறுவர்களின் பயன்பாட்டு நேரத்திற்கு மாத வரம்புகளை அமைப்பது, நள்ளிரவு நோட்டிபிகேஷன்களைக் கட்டுப்படுத்துவது, தெரியாத நபர்கள் சிறுவர்களைத் தொடர்புகொள்வதைத் தடுப்பது மற்றும் AI சாட்பாட்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்குவது போன்ற பல புதிய கட்டுப்பாடுகளையும் மெட்டா தனது செயலிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ள மெட்டா நிறுவனம், தங்கள் தளங்களில் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top