ஒரு நாள் மற்றும் T20 தொடரில் சிறப்பாக செயற்படும் இந்திய அணி அண்மைக் காலமாக டெஸ்ட் தொடரில் சொதப்பி வருகிறது.15ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சவாலை சமாளிக்க தயாராக இருப்போம் என வீரர்களுக்கு இந்திய பயிற்சியாளர் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா மற்றும் இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 15ஆம் தேதி காலியிலும் 2வது டெஸ்ட் 23 ஆம் தேதி கொழும்பிலும் இடம்பெறவுள்ளன.