Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி!

SOORIYAN GOSSIP - ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
இங்கிலாந்தில் நடைபெறும் புகழ்பெற்ற 'தி ஹண்ட்ரட்' தொழில்முறை கிரிக்கெட் தொடரின் 6ஆவது Season அண்மையில் நிறைவுற்றது. மொத்தம் 8 முன்னணி அணிகள் பங்கேற்ற இத்தொடரின் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் சேர்த்தது.

159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர் டிம் சீபர்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 38 பந்துகளில் 72 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். இவரைத் தொடர்ந்து பால் வால்டர் 22 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.


இறுதிவரை களத்தில் நின்ற லீவிஸ் டு ப்ளாய் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 98 பந்துகளில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது. 2 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 'தி ஹண்ட்ரட்' தொடரின் சாம்பியன் பட்டத்தை மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கம்பீரமாகக் கைப்பற்றியது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top