43 Views
ஈரமான தலைமுடி மிகவும் மென்மையாகவும் எளிதில் உடையக்கூடிய நிலையிலும் இருக்கும். இந்த நிலையில் தலையணையில் படுத்துத் தூங்கும்போது ஏற்படும் உராய்வு காரணமாக முடி உடைதல் மற்றும் முடி சிக்குவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மேலும், நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் இருக்கும் தலையின் சருமத்தில் சிலருக்கு பூஞ்சை வளர்ச்சி மற்றும் பொடுகு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒரு சிலர் ஈரமான கூந்தலில் துணியை இறுக்கமாகக் கட்டி வேகமாக துணியால் முடியை இழுப்பது தலை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, தலைக்குக் குளித்த பிறகு மென்மையான துணியால் கூந்தலில் உள்ள அதிகப்படியான நீரை ஒற்றி எடுத்து, முடிந்தவரை உலர்ந்த பின்னரே தூங்குவது நல்லது. தலைமுடியை மிகவும் சூடான காற்றில் உலர்த்துவதைத் தவிர்ப்பதும் அவசியம்.