இயற்கையான சருமப் பராமரிப்பில் கற்றாழை முக்கிய இடம் பிடிக்கிறது. இதில் உள்ள ஈரப்பதமூட்டும் தன்மை, சருமத்தின் வறட்சியைக் குறைத்து மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
இதனால் பலரும் முகப் பராமரிப்பில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துகின்றனர்.
கற்றாழையை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பு, கையின் உட்புறத்தில் சிறிதளவு பூசி ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதைப் பரிசோதிப்பது நல்லது.
இயற்கையான கற்றாழை இலையைப் பயன்படுத்தும் போது, அதன் மஞ்சள் நிறச் சாற்றைத் தவிர்த்து, சுத்தமான தெளிவான ஜெல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலருக்கு கற்றாழையால் அரிப்பு, சிவத்தல் அல்லது எரிச்சல் ஏற்படலாம். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கழுவிவிட்டு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.