Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Vallibel Finance Fixed Deposit Advertisement
Nov
10
சூர்யாவின் ‘சீன்’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் அட்லீ!

SOORIYAN GOSSIP - சூர்யாவின் ‘சீன்’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் அட்லீ!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16 Views

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ‘சீன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. மலையாளத்தில் ‘ஆவேஷம்’, ‘ரோமாஞ்சம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.



இந்நிலையில், ‘சீன்’ திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லீ, படக்குழுவினரைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் சிறந்த வணிகத் திரைப்படமொன்றைப் பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், ஜித்து மாதவனின் கதையமைப்பிற்குத் தாம் இரசிகர் என்றும், இப்படம் தனித்துவமான அனுபவத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சூர்யாவின் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், இப்படத்தில் நடித்துள்ள நஸ்லெனின் நடிப்பைப் பாராட்டிய அட்லீ, அவரிடம் சிறந்த நடிகருக்கான திறமை இருப்பதாகவும், எதிர்காலத்தில் அவர் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். நடிகை நஸ்ரியாவின் நகைச்சுவை மற்றும் துடிப்பான நடிப்பையும் பாராட்டிய அவர், படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அட்லீயின் இந்தப் பதிவு தற்போது இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top