இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது. போட்டி முடிய ஒரு மணி நேரம் இருந்தபோது சமநிலையில் முடித்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வெற்றி முயற்சிக்காக இந்திய அணி கடைசி வரை ஆடி இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
"வெலிங்டன் டெஸ்டில் கடைசி ஒரு மணி நேரம் (15 ஓவர்) இந்திய அணி விளையாடி இருக்க வேண்டும், வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை வீரர்களிடம் இல்லை. இந்தியாவின் வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் தேவைப்பட்டன.போட்டியை தொடர்ந்து இருந்தால் இந்திய அணி வென்று இருக்கும் என்று கூறவில்லை. ஆனால் வெற்றிக்காக முயற்சி செய்திருக்கலாம்."எனக் குறிப்பிட்டுள்ளார்.