தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் சரத்குமார். இவர் இதுவரை 176க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் சரத்குமார் இயக்குநர் தனா இயக்கத்தில் தன்னுடைய 177வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்திற்கு Taxi என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகை ராதிகாவின் Radon Media Works இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரபிக்கப்படவுள்ளது. இத்திரைப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்டின் பிரபாகரன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.