கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையால் பிடித்த பிடியெடுப்பு ஒன்று இணையத்தில் வைரலாகிவருகின்றது.
சுனில் நரைன் தூக்கி அடித்த பந்து எல்லைக்கோட்டை நோக்கிச் சென்றபோது எல்லையில் நின்றிருந்த கிளென் பிலிப்ஸ் வேகமாக ஓடிவந்து, பாய்ந்து ஒற்றை கையால் பிடியெடுத்து அசத்தினார். இந்த பிடியெடுப்பை அவரே நம்பமுடியாமல் சிரித்தபடி நின்றது இப்போது வைரலாகியுள்ளது.