நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் AI மற்றும் லேசர் தொழில்நுட்பம் இணைந்த புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனம் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் பறக்கும் நுளம்புகளை அடையாளம் கண்டு, அவற்றின் இயக்கத்தைத் துல்லியமாகக் கண்காணிக்கிறது.
நுளம்பு என உறுதி செய்யப்பட்டதும், குறிப்பிட்ட இலக்கை நோக்கி லேசர் கதிரை செலுத்தி அதை அழிக்கிறது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தாமல் நுளம்புகளை கட்டுப்படுத்தும் புதிய வழியாக இந்தத் தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. இதன் செயல்பாடு ஏவுகணைகளை இடைமறிக்கும் ‘Iron Dome’ பாதுகாப்பு அமைப்பை நினைவுபடுத்துவதால், இதற்கு ‘கொசுக்களுக்கான Iron Dome’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது.