விஜய் தேவரகொண்டாவின் “ரணபாலி” படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா.
இவரது நடிப்பில் உருவாகிவரும் "ரணபாலி' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
1870-களில் நடைபெற்ற பிரித்தானிய ஆட்சி மற்றும் பெரும் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.
அந்த காலகட்டத்தில் தனது மக்களை காப்பாற்ற போராடும் ஒரு புரட்சிகர வீரனை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம்,
பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் நாளை மாலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.