35 Views
இதனால் Bettry இல் நீர் குறைந்தால் Distilled water மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது என அறிவுறுத்தப்படுகிறது. இதில் கனிமங்கள் மற்றும் உப்புகள் இல்லாததால், Bettry இன் செயல்பாட்டில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும், Bettry இல் நீரை நிரப்பும்போது அதிகமாக ஊற்றாமல், குறிப்பிடப்பட்ட அளவு வரை மட்டுமே நிரப்ப வேண்டும். பிரதான முதன்மை மின்சாரத்தையும் Inverter இனையும் அணைத்த பின்னரே இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
Bettry இன் நீர்மட்டத்தினை மின் பயன்பாட்டைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிப்பது நல்லது. குறிப்பாக, Bettry இல் உள்ள அமிலக் கலவை கைகளில் படாதவாறு கவனமாக கையாள வேண்டும். சாதாரண தண்ணீர் bettry பாதிப்பை ஏற்படுத்தலாம் . சரியான முறையில் Distilled water இனைப் பயன்படுத்துவது Bettry இன் செயல்திறனையும் ஆயுளையும் பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.