பச்சை மிளகாய் சுவைக்கு மட்டுமல்ல உடலில் காணப்படும் கலோரிகளை குறைத்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. நுரையீரல் புற்று நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைகிறது.
நோய் தொற்றுக்கள் வராமலும் பச்சை மிளகாய் தடுக்கிறது. பச்சை மிளகாயில் விட்டமின் C காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சைனஸ் மற்றும் சளித் தொந்தரவு உள்ளவர்கள் பச்சை மிளகாயைச் சாப்பிடும்போது, அதில் உள்ள காரத்தன்மை மூக்கடைப்பை நீக்கி சுவாசத்தை எளிதாக்க உதவுகிறது.
பச்சை மிளகாய் சாப்பிடும்போது மூளையில் Happy Hormone எனப்படும் Endorphin சுரப்பதால் அது மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.