61 Views
திருமணமாகி சில வாரங்களே ஆன நிலையில், மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல், மலையாளத்தில் வெளியான 'நிழல்', 'மதுரம்' மற்றும் 'தாகினி' உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களுக்குத் துணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில்,அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.