இரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, அது இரத்தக் குழாய்களின் சுவர்களில் படிந்து குழாய்களைச் சுருக்கமடையச் செய்கிறது.தொடர்ந்து இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது இரத்த நாளங்களைப் பலவீனப்படுத்தி, காலப்போக்கில் தமனிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி இருந்தால், அது இரத்தக் குழாய்களைச் சேதப்படுத்தி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கம் இல்லாமை இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் பாதித்து மாரடைப்பைத் தூண்டக்கூடும்.
குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதிலேயே இதய நோய் இருந்தால், மரபணு ரீதியாக மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், 55 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக காணப்படுகிறது.
சிலருக்குப் பிறப்பிலேயே இதய இரத்தக் குழாய்கள் தவறான இடத்தில் அமைந்திருக்கும். இவை அருகிலுள்ள தசைகளால் அழுத்தப்படும்போது இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படலாம்.