63 Views
அருண்குமார் தனது 10 வயதில் குடும்பத்தின் பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக நான்காம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்தி வேலைக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவருடன் பணியாற்றிய பாரவூர்தி சாரதியான நேரு, அருண்குமாரின் கல்வியைத் தொடர ஊக்கமளித்ததுடன், பயணங்களின்போதும் அவருக்குப் பாடங்களைக் கற்பிக்க உதவியுள்ளார். தேநீர் இடைவேளையின்போது அருண்குமார் மனம் விட்டுச் சிரித்த தருணத்தை நேரு காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அது பெருமளவில் பகிரப்பட்டது.
இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் சிரிப்புக் காணொளிகள் மூலம் பிரபலமான அருண்குமார், மீண்டும் கல்வியைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு சாதாரண தேநீர் இடைவேளையில் பதிவான காணொளி அவருக்குப் பரவலான அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்ததுடன், அவரது வாழ்க்கைப் பயணமும் தற்போது பலருக்கு ஊக்கமளிக்கும் கதையாக மாறியுள்ளது.