இயக்குநர் மோகன் ராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி, வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகராக திகழ்கிறார்.
இயக்குநர் மோகன் ராஜ் மற்றும் கார்த்திக் கூட்டணி முதல் முறை இணைவதால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷா மற்றும் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.