57 Views
முக அமைப்பிற்கு ஏற்ப,
வட்ட வடிவ முகம்
உங்கள் கன்னத்தின் எலும்புகளின் மேல் பகுதியில் தொடங்கி, காதுப் பகுதி நோக்கி மேல்நோக்கி Blush பயன்படுத்த வேண்டும். இது முகத்தை மெலிதாகக் காட்ட உதவும். சிரித்தால் மிக அழகாக இருக்கும் .
நீள வடிவ முகம்
கன்னங்களின் மையப் பகுதியில் தொடங்கி, காதுகளை நோக்கி நேர்க்கோட்டில் Blush பயன்படுத்த வேண்டும். இது முகத்தின் நீளத்தைக் குறைத்துக் காட்டும். தனி அழகை கூட்டும்.
சதுர வடிவ முகம்
கன்னங்களின் மையப் பகுதியில் வட்ட வடிவில் பயன்படுத்த வேண்டும். இது முகத்தின் கூர்மையான தாடை அமைப்பை மென்மையாக்க உதவும். பார்ப்பதற்கே அழகாக தெரியும்.
சிரித்துக் கொண்டே தொடங்குங்கள்..
கண்ணாடியைப் பார்த்து லேசாகச் சிரிக்கும் போது உப்பலாகத் தெரியும் கன்னப் பகுதியில் இருந்து Blush செய்யத் தொடங்க வேண்டும்.
அளவோடு பயன்படுத்துங்கள்..
எப்போதும் பிரஷில் குறைந்த அளவு Blush எடுத்துப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
‘Glass Blush’ ஜெல் வடிவில் இருக்கும் இந்த மேஜிக் Blush,முகத்தில் வைத்த உடனே சருமத்தோடு கச்சிதமாக blend ஆகி கன்னங்களுக்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தையும், கண்ணாடியைப் போன்ற ஷைனிங் தோற்றத்தையும் தரும்.