நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் ஹிந்தியில் Ek Din திரைப்படம் வெளியாகி அனைவரும் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியுள்ளது. இத்திரைப்படம் முதல் வார இறுதியில் இந்தியப்பெறுமதிப்படி 3.25 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளது.
அமீர்கான் போன்ற ஒரு பெரிய நட்சத்திரம் நேரடியாக விளம்பரப் பணிகளில் ஈடுபட்ட போதிலும், ஹிந்தி இரசிகர்களிடையே இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெறவில்லை.
தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் மூலம் தனக்கான தனி இரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள சாய் பல்லவிக்கு Bollywoodஇல் இது ஒரு மோசமான ஆரம்பமாக காணப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக அடுத்து நடித்துள்ள "ராமாயணம்" திரைப்படம் சாய் பல்லவிக்கு வெற்றியை பெற்று தருமா என்ற கேள்வி தற்போது இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இத்திரைப்படத்தின் முதல் பாகம் இவ்வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.