மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான துல்கர் சல்மான், செல்வமணி செல்வராஜ் இயக்கும் 'காந்தா' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்படப் புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.