துல்கர் சல்மானின் Im Game திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நஹாஸ் ஹிதாயத் இயக்கிய இந்த திரைப்படம் சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். அவருக்கு இந்த திரைப்படம் 40ஆவது படமாக அமைந்துள்ளது.
இதில் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
துல்கர் சல்மான் நடித்துள்ள ImGame திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் August மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.