டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘லெனின் பாண்டியன்’ படத்தில் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இந்நிலையில், தர்ஷன் கணேசனின் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் Trailar இன்று மதியம் 12:20 க்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரன் மற்றும் ரோஜா நடித்துள்ளனர்.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சத்யஜோதி நிறுவனம் – இளையராஜா கூட்டணி பல மறக்க முடியாத படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘மூன்றாம் பிறை’, ‘தங்க மகன்’, ‘காக்கி சட்டை’, ‘பகல் நிலவு’, ‘காதல் பரிசு’, ‘கிழக்கு வாசல்’, ‘பணக்காரன்’, ‘இதயம்’, ‘ஆனஸ்ட் ராஜ்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது.
தற்போது ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலமாக சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தில் நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் இப்படத்தில் அவரது கதாபாத்திரன் பெயர் பிரியா என்றும் படக்குழு வெளியிட்டுள்ளது.