நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை தற்போது தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார், 'Don ' திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
முன்னதாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு April மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இம்மாதம் 27ஆம் திகதி சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதே சமயம் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.