தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, 'AjithKumar Racing' என்ற பெயரில் சொந்த கார் பந்தய அணியைத் தொடங்கி பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று பிரான்சில் நடைபெறவுள்ள கார் பந்தயப் போட்டியில் 'Ajith Redant Racing' அணி சார்பில் இரண்டு முக்கிய கார்கள் களமிறங்கவுள்ளன.
இன்று இரவு 10:45இற்கு தொடங்கவுள்ள இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை 'AjithKumar Racing Official' என்ற youtube தளத்தில் இரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.