நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
முதல் T20 போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. இரண்டாவது T20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது மற்றும் கடைசி T20 போட்டி டாக்காவில் நடைபெற்றது.
மழை காரணமாக, குறித்த போட்டி 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 14.2 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து, 103 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 11.4 ஓவர்களில் 104 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் T20 தொடர் 1-1 என சம நிலையில் முடிவடைந்துள்ளது.