வைஷாக் இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் நடிக்கும் புதிய மலையாளத் திரைப்படம் 'கலீபா' வின் Glimpse வைரலாகி வருகிறது.இந்த வீடியோ ’The Blood Line’ என்ற தலைப்பில் வெளியாகி Youtube இல் 5 மில்லியனைத் தாண்டி உள்ளது.
'கலீபா' திரைப்படம் அடுத்த ஆண்டு ஓணம் அன்று பெரிய அளவில் வெளியாக உள்ளது.'போக்கிரி ராஜா' திரைப்படத்தின் வெற்றிக்கு பின் பிரித்விராஜும் வைஷாக்கும் இந்தத் திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இதுமட்டுமில்லாமல், பிரித்விராஜ், S.S.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் PAN INDIA படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.